search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    ராயபுரம் தொகுதியில் போட்டியிட தயாரா? - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்

    ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து மு.க.ஸ்டாலின் போட்டியிட தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

    அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராயபுரம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என்று சவால் விடுத்தார். 

    மேலும், அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும். தி.மு.க.வினர் நாகரிகமாகப் பேசவேண்டும் என தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று சீமான் மற்றும் குஷ்பு உள்ளிட்ட ஒரு சிலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×