search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சாந்தா
    X
    கலெக்டர் சாந்தா

    ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத வீட்டு உபயோக மின் சாதனங்களை விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சாந்தா எச்சரிக்கை

    ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத வீட்டு உபயோக மின் சாதனங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருவாரூர்:

    வீட்டு உபயோக மின் சாதனங்களான சலவை எந்திரம், மின்சார சமையல் பாத்திரம், நீர் சூடேற்றும் பாத்திரம், தேனீர் தயாரிப்பு பாத்திரம், அரவை எந்திரம் போன்றவைகளை இந்திய அரசு வீட்டு உபயோக மின் சாதனங்கள் தர கட்டுபாட்டு ஆணை 1981-ன்படி தரக்கட்டுபாட்டு சான்று உள்ளவைகளையே தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய வேண்டும். மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைத்திருக்கவோ கூடாது.

    தரமற்ற மின்சார வீட்டு உபயோக சாதனங்களை பயன்படுத்தும்போது மின் விபத்து காரணமாக பேரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே தரக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணைப்்படி திருவாருர் மாவட்டம் முழுவதும் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆய்வின்போது உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட தர ஆய்வின்படி இல்லாத மின் சாதன பொருட்கள் மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்ய மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர பதிவுகள் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுக வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் இந்திய தரக்கட்டுபாட்டு முத்திரை(ஐ.எ,ஸ்.ஐ.) பெற்ற பொருட்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செயய வேண்டு்ம். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
    Next Story
    ×