search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் கிராமசபை கூட்டத்தில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தபடம்.
    X
    மக்கள் கிராமசபை கூட்டத்தில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தபடம்.

    ஒட்டன்சத்திரம் உள்பட 5 தொகுதிகள் பயன்பெறும் வகையில் ரூ.700 கோடியில் ஆறுகள் இணைப்பு திட்டம் - சக்கரபாணி எம்.எல்.ஏ.

    தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஒட்டன்சத்திரம் உள்பட 5 தொகுதிகள் பயன்பெறும் வகையில் ரூ.700 கோடியில் ஆறுகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசினார்.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பு‌‌ஷ்பத்தூர் ஊராட்சி வயலூரில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். மேலும் தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல் ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.500 கோடியில் ஆழியாறு-பரம்பிக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இதற்காக ரூ.30 லட்சத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் பருவமழை காலத்தில் உபரிநீர் கடலுக்கு வீணாக செல்கிறது. அதை பயன்படுத்தும் வகையில் அமராவதி, பச்சையாறு, குதிரையாறு, பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குடகனாறு, நல்லதங்காள் ஆறு, நங்காஞ்சியாறு ஆகியவை ரூ.700 கோடியில் இணைக்கப்படும். இதையொட்டி ரூ.10 லட்சத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இதன்மூலம் ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், ஆத்தூர், நத்தம் ஆகிய 5 தொகுதிகளில் விவசாயம், குடிநீருக்கான தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும்.

    இதுதவிர பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் கொத்தையத்தில் அமைந்துள்ளது. அங்கு திருப்பதி தேவஸ்தானம் போன்று அனைத்து வசதியுடன் கூடிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேலும் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டியில் அரசு கல்லூரிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பு என்ற காதர்பாட்சா, வெங்கிடுசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கிரு‌‌ஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிகரசுதன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்தகொண்டனர்.

    Next Story
    ×