search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை விலை 50 காசுகள் சரிவு

    கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 3 நாட்களில் 50 காசுகள் சரிவடைந்து, 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

    பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

    சென்னை-485, ஐதராபாத்-420, விஜயவாடா-460, மைசூரு-475, மும்பை-510, பெங்களூரு-475, கொல்கத்தா-500, டெல்லி-495. முட்டைக்கோழி கிலோ ரூ.49-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.47 ஆக சரிவடைந்து உள்ளது.

    கறிக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பல்லடத்தில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.72 ஆக சரிவடைந்து உள்ளது.

    கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இதையொட்டி குறிப்பிட்ட சில பகுதிகளில் முட்டை மற்றும் கோழி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் முட்டையின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    இதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலும் முட்டையின் நுகர்வு குறைந்து உள்ளது. இதனால் முட்டைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க முட்டையின் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×