search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருஞ்சாணி அணை
    X
    பெருஞ்சாணி அணை

    பெருஞ்சாணி அணை மூடல்- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    பாலமோர் பகுதியில் கொட்டித்தீர்த்துவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    சுருளோடு, புத்தன் அணை, அடையாமடை பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட் டியது. சுருளோட்டில் அதிகபட்சமாக 74.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாகர்கோவில், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டித்தீர்த்துவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.45 அடியாக இருந்தது. அணைக்கு 868 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 320 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 65.07 அடியாக இருந்தது. அணைக்கு 587 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர் மட்டம் 11.12 அடியாக உள்ளது. அணைக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.21 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.23 அடியாகவும் உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-39.4, பெருஞ்சாணி-48.8, சிற்றாறு 1-33, சிற்றாறு 2-43, மாம்பழத்துறையாறு-6, கோழிப்போர்விளை-23, புத்தன் அணை-47.6, திற்பரப்பு-26, நாகர்கோவில்- 7.4, பூதப்பாண்டி-11.4, சுருளோடு-74.6, கன்னி மார்-32.8, ஆரல்வாய் மொழி-2.2., பாலமோர்-36.2, மயிலாடி-15.2, கொட்டாரம்-15, அடையாமடை-59, குளச்சல்-4.

    Next Story
    ×