search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கங்கைகொண்டானில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது-லோடு ஆட்டோ பறிமுதல்

    கங்கைகொண்டானில் 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து, லோடு ஆட்டோைவ பறிமுதல் செய்தனர்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கங்ைககொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோபனா ஜென்சி மற்றும் போலீசார் நேற்று மதியம் ராஜபதி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த லோடு ஆட்டோவில் மூட்டைகளில் சுமார் 3 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த வினோத் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசாரின் விசாரணையில், கங்கைகொண்டான்-மறக்குடி ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுெதாடர்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மன்சூர் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பறிமுதல் செய்த மொத்தம் 5 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் மூலம் நெல்லை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
    Next Story
    ×