search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை காணலாம்
    X
    ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை காணலாம்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்தும், குமரி மாவட்டம் வழியாகவும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ் தலைமையில் வருவாய்த்துறை பறக்கும் படை தனி தாசில்தார் பாபு ரமேஷ், துணை தாசில்தார் அருள் லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழு நேற்று அதிகாலை 4 மணி அளவில் திட்டுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக ஒரு லாரி வந்தது. எனவே லாரியை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினர்.

    இதனையடுத்து லாரியை சாலை ஓரமாக டிரைவர் நிறுத்தினார். ஆனால், லாரி நின்றதும் அதிகாரிகளை பார்த்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை அதிகாரிகள் பிடிக்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.

    அதன்பிறகு லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சுமார் 18 டன் ரேஷன் அரிசி இருந்ததுள்ளது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை லாரியுடன் சேர்த்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. அதோடு லாரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? எங்கிருந்து ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது? என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    Next Story
    ×