search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகர பஸ்கள்
    X
    மாநகர பஸ்கள்

    14-வது ஊதிய ஒப்பந்தம் போக்குவரத்து ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    14-வது ஊதிய ஒப்பந்தக்குழு பேச்சுவார்த்தைக்கு அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் கமலக்கண்ணன், தொமுச செயலாளர் சண்முகம், சிஐடியு, பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    3 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறுவது வழக்கம். 2017-ம் ஆண்டு 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 14-வது ஊதிய ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு ஏற்பட்டு இருக்க வேண்டும்.

    ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

    இந்த நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஊதிய ஒப்பந்தக்குழு பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் இன்று தொடங்கியது.

    போக்குவரத்து செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் ஊதியக்குழு கன்வீனரும் மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனருமான இளங்கோவன் முன்னிலையில் நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு 68 அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட் சங்கங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

    அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் கமலக்கண்ணன், தொ.மு.ச. செயலாளர் சண்முகம், ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்ற பிரதி நிதிகள் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

    ஊதிய உயர்வு, ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 48 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இந்த வருடம் கோர்ட்டு உத்தரவுபடி அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட் டுள்ளது.

    முதல் கட்ட பேச்சு வார்த்தை இன்று தொடங்கியது. இதையடுத்து 3 அல்லது 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இந்த கூட்டத்தில் அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், “அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது தரப்பில் உள்ள கோரிக்கைளை முன் வைத்து பேசுவார்கள். எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது இப்போது கூற முடியாது” என்றார்.

    Next Story
    ×