search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் கலெக்டர்
    X
    சேலம் கலெக்டர்

    குறிப்பிட்ட நாளில், ரே‌‌ஷன்கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் - கலெக்டர் ராமன் தகவல்

    கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் வேளையில் மட்டும் அந்தந்த ரே‌‌ஷன்கார்டுதாரர்கள் ரே‌‌ஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்று கொள்ள வேண்டும், என சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் வேளையில் மட்டும் அந்தந்த ரே‌‌ஷன்கார்டுதாரர்கள் ரே‌‌ஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்று கொள்ள வேண்டும், என சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

    அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 27 அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கும் மற்றும் 891 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 10 லட்சத்து 8 ஆயிரத்து 918 ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மொத்தம் ரூ.252.23 கோடி மதிப்பில் வழங்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அந்தந்த ரே‌‌ஷன் கடைகளில் கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் வேளையின் அடிப்படையில் வழங்கப்படும். இதில் விடுபட்ட ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு 13-ந்தேதி (புதன்கிழமை) அன்று வழங்கப்பட உள்ளது.

    ரே‌‌ஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தவிர்த்திட நாள் ஒன்றுக்கு காலையில் 100 அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கும், மாலையில் 100 அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கும் என மொத்தம் நாள் ஒன்றுக்கு 200 அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு மட்டும் கூப்பன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    எனவே, அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கூப்பன்களில் உள்ள தேதி மற்றும் வேளையில் மட்டுமே அந்தந்த ரே‌‌ஷன் கடைகளுக்கு நேரில் சென்று ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மேலும், அனைத்து அரிசி ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவும், ரே‌‌ஷன்கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் வந்தாலும் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்கத் தேவையில்லை, அவர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு உடனுக்குடன் வழங்கப்படும். இதேபோல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×