search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டில் 511 போக்சோ வழக்குகள் பதிவு - ஐ.ஜி. தகவல்

    கோவை அருகே மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டில் 511 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.
    கோவை:

    கோவை உள்பட 8 மாவட்டங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக காவலன் செயலி, நம் காவல் செயலி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இதனால் கடந்த (2020) ஆண்டு 511 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. மேலும் பெண்களுக்கு எதிரான வரதட்சணை இறப்பு குற்றங்களுக்கான வழ க்குகள் முந்தைய ஆண்டு 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டன.மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு லாட்டரி, மதுவிலக்கு, மணல் கடத்தல் மற்றும் கஞ்சா வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டன.அதன்படி கடந்த ஆண்டு ஆயிரத்து 849 லாட்டரி வழக்குகளும், 39 ஆயிரத்து மதுவிலக்கு வழக்குகளும், 5 ஆயிரத்து 564 குட்கா வழக்குகளும், 708 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    கடந்த ஆண்டில் 40 கொலை வழக்குகளிலும், 6 ஆதாய கொலை வழக்குகளிலும், 21 வழிப்பறி கொள்ளை வழக்குகளிலும், 3 கற்பழிப்பு வழக்குகளிலும், 44 போக்சோ வழக்குகளிலும் மற்றும் பல்வேறு வழக்குகள் என மொத்தம் 8 ஆயிரத்து 784 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.மேற்கு மண்டலம் முழுவதும் கடந்த ஆண்டில் 43 ஆயிரத்து 352 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் குற்றங்கள் அதிக அளவில் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மு க்கிய வழக்குகள் மற்றும் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. கடந்த ஆண்டு மொத்தம் 174 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×