search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    கமல்ஹாசன் 4-ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை சேலத்தில் தொடங்குகிறார்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 4-ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை சேலத்தில் தொடங்குகிறார்.

    சேலம்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.

    2-‍ம் கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். 3-ம் கட்டமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இதை தொடர்ந்து 4-ம் கட்டமாக கமல்ஹாசன் இன்று முதல் 3 நாட்கள் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக இன்று மதியம் கமல்ஹாசன் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் அவர் குரங்கு சாவடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். மாலை அழகாபுரம் தெய்வீக கல்யாண மண்டபம் அருகில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதன்பிறகு அஸ்தம்பட்டி கோரிமேடு வழியாக ஏற்காடு செல்கிறார்.

    ஏற்காடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதன் பிறகு அங்குள்ள ஒரு ஓட்டலில் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்தாய்வு நடத்துகிறார். அதன் பின்னர் குப்பனூர் வழியாக சேலம் அயோத்தியபட்டினம் பஸ் நிறுத்தம் அருகே உரையாற்றுகிறார்.

    தொடர்ந்து ரெட்டி பட்டியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிகிறார். நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் 4 ரோட்டில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு அம்மாபேட்டை காமராஜர் காலனி அமைந்துள்ள கொங்கு கல்யாண மண்டபத்தில் நெசவாளர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அதன் பின்னர் அம்மாபேட்டையில் இருந்து பட்டை கோவில் சின்னக்கடை வீதி வழியாக கருவாட்டு பாலம், தாதகாப்பட்டி கேட் அன்னதானப்பட்டி நெத்திமேடு கொண்டலாம்பட்டி பைபாஸ் வழியாக கொண்டலாம்பட்டி சந்தை ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்கஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    Next Story
    ×