search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தீவிரம்
    X
    பொங்கல் பரிசு தொகுப்பு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தீவிரம்

    பொங்கல் பரிசு தொகுப்பு தயார் செய்யும் பணி தீவிரம்

    திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருச்சி:

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2,500 பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. மாவட்டம் தோறும் ரே‌‌ஷன்கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வினியோகம் செய்தனர். வரும் 13-ந் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பை அரிசி பெறும் அனைத்து ரே‌‌ஷன் கார்டு தாரர்களுக்கும் வழங்கி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், உலர்திராட்சை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஊழியர்கள் ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை உள்ளிட்டவைகளை தனித்தனி பாக்கெட்டுகளில் போட்டு தயார் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×