search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டு அன்று பிறந்த 20 புதுமலர்கள்

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டு அன்று 20 புதுமலர்களைப்போல குழந்தைகள் பிறந்தன.
    திருச்சி:

    ஆங்கில புத்தாண்டு நாடு முழுவதும் நேற்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. இரவு கண்விழித்து ஆர்வமாக இளைஞர்கள் பலர் புத்தாண்டு கொண்டாடியதுடன், செல்போன்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள், தோழிகளுடன் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

    திருச்சியில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட சில கட்டுப்பாடுகளை மாநகர போலீசார் விதித்திருந்தனர். எனவே, இரவு முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சாலைகளில் வேகமாக இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இருப்பினும் சில பொது இடங்களில் கேக் வெட்டியும் புத்தாண்டினை கொண்டாடினர்.

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கான, மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் புத்தாண்டு அன்று 20 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 10 ஆண் குழந்தை, 10 பெண் குழந்தைகள் ஆவர் என டீன் டாக்டர் வனிதா தெரிவித்தார்.

    புத்தாண்டு தினத்தில் புதுமலர்களைப்போல குழந்தைகள் பிறந்ததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்கள், ஆஸ்பத்திரி நர்ஸ், டாக்டர் உள்ளிட்டவர்களுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அக்குழந்தைகள் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று பிறந்தநாளையும் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×