search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    ஆங்கில புத்தாண்டு- தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை

    ஆங்கில புத்தாண்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    பண்டிகை காலங்களில் மதுபாட்டில்கள் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது. ‘குடி மகன்கள்’ பண்டிகை அன்று வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தி கொண்டாடுகிறார்கள். அதனால் தான் மற்ற நாட்களை விட தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகமாக நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரித்து வருவதைபோல் இந்த ஆண்டும் மதுவிற்பனை அதிகமாகி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் 155 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆங்கில புத்தாண்டுக்கு முந்தைய நாளில் இருந்து மதுவிற்பனை அதிகமாக இருந்தது. டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பொதுவாக பீர் வகைகள் தான் அதிகம் விற்பனை ஆகும்.

    ஆனால் இந்த ஆண்டு பீர் விற்பனை மந்தமாகி, மதுபான வகைகள் தான் அதிகஅளவில் மதுபிரியர்கள் வாங்கி சென்றனர். பீர், ரம், பிராந்தி என பல வகையான மதுவை வாங்கி சென்று புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரு நாளில் ரூ.4 கோடியே 54 லட்சத்திற்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக மது விற்பனை ஆகி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×