search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுங்கச்சாவடி (கோப்புப்படம்)
    X
    சுங்கச்சாவடி (கோப்புப்படம்)

    நாளை முதல் பாஸ்டேக் கட்டாயம்

    ஜனவரி 1-ந் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

    சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாளை முதல் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம். பாஸ்டேக் கணக்கிலிருந்தே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுங்கச்சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் பாஸ்டேக் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×