search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    திருப்பூர் சந்தையில் மல்லிகைப்பூ விலை தொடர்ந்து உயர்வு

    திருப்பூர் சந்தையில் மல்லிகைப்பூ விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது அனைத்து இடங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

    இதனால் திருப்பூருக்கு ஒவ்வொரு நாளும் பூக்களின் வரத்து குறைந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பூவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு 300 கிலோ வரைக்கும் மல்லிகைப்பூ விற்பனைக்கு வந்த நிலையில் கடந்த சில தினங்களாகபூ வரத்து வெகுவாக குறைந்தது. அந்த வகையில் நேற்று சுமார்60 கிலோ மல்லிகைப்பூ மட்டுமே விற்பனைக்கு வந்தது.

    இதன் காரணமாக நேற்று முன்தினம் கிலோ ரூ.2,400-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1,200-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், அரளி ரூ.280 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருவது அனைவரையும் கலக்கமடைய செய்துள்ளது.
    Next Story
    ×