search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    ரூ.2500 பொங்கல் பரிசு: முதல்வர் படத்துடன் டோக்கன் வழங்க தடை கேட்டு திமுக வழக்கு

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2,500 முதல்வர் படத்துடன் டோக்கன் வழங்க உள்ளதால் தடை கேட்டு திமுக ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 2,500 வீதம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த டோக்கனை ஆளும் கட்சியினர் வழங்கிவருவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்குவதற்கு தடை கேட்டு வழக்கு தொடர உள்ளதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று முறையிட்டார்.

    ஆளுங்கட்சியினர் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    இது விதிமுறைக்கு எதிரானது ஆகும். டோக்கன் வழங்குவதில் பாரபட்சமும், முறைகேடுகளும் நடைபெறும்.

    எனவே, பொங்கல் பரிசு வழங்குவதற்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்-அமைச்சர் உள்ளிட்டோரது புகைப்படங்களுடன் கூடிய டோக்கன் வழங்க தடை கேட்டு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி வழக்கு தொடர உள்ளார். இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வக்கீல் கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள் வழக்கு மனுவை எதிர் மனுதாரர்களான அரசு தரப்புக்கு முதலில் வழங்க வேண்டும் என்று கூறினர்.

    Next Story
    ×