search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமுகை அருகே காட்டு யானை ஜன்னலை உடைத்து சேதப்படுத்திய ரேஷன் கடையை காணலாம்.
    X
    சிறுமுகை அருகே காட்டு யானை ஜன்னலை உடைத்து சேதப்படுத்திய ரேஷன் கடையை காணலாம்.

    சிறுமுகை அருகே ரேஷன் கடையின் ஜன்னலை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

    சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவையை அடுத்த சிறுமுகை சத்தி மெயின் ரோடு சம்பரவள்ளிபுதூரில் பெத்திக்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. இங்கு 450-க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்.

    இந்த ரேஷன் கடையின் அருகே நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை, ரேஷன் கடையின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து தூக்கி வீசியது. பின்னர் அந்த யானை துதிக்கையை ரேஷன் கடைக்குள் விட்டு அரிசி உள்ளிட்ட பொருட்களை தேடியது. ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த யானை, ரேஷன் கடையை சிறிது நேரம் சுற்றி சுற்றி வந்தது. இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டினார்கள். இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர். எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×