search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல்லையில் டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

    நெல்லையில் டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 25). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று செல்வகுமாரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து செல்வகுமார் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். உடனே கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை போலீசார் மைக் மூலம் அறிவித்து, சுற்று வட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது தாழையூத்து நோக்கி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 வாலிபர்களையும் போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29), நெல்லை டவுனைச் சேர்ந்த சீனி மாரியப்பன் (28), என்பதும், செல்வகுமாரிடம் நகை பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைதான கார்த்திக் உள்ளிட்ட 2 பேரும் ஏற்கனவே பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்ததும், பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
    Next Story
    ×