search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலத்தில் 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.63 ஆயிரம் அபராதம் விதிப்பு

    சேலத்தில் 38 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.63 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுபுறச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்கள் விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் அரசு தடைவிதித்துள்ளது.

    அதன் அடிப்படையில், சேலம் மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், செவ்வாய்பேட்டை பகுதியில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களை கொண்ட 3 கண்காணிப்பு குழுவினர் அங்குள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, 38 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 550 கிலோ எடையுள்ள, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.63 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டினை முற்றிலும் தடுக்கும் வகையில் தினமும் ஆய்வுகளை மேற்கொண்டு கண்காணிக்குமாறு, கண்காணிப்பு குழுவினருக்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுமக்கள் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×