என் மலர்

  செய்திகள்

  பேராசிரியர் தொ பரமசிவன்
  X
  பேராசிரியர் தொ பரமசிவன்

  பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவு- கமல்ஹாசன் இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் தொ.பரமசிவன் காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் முதுகலை தமிழ் பயின்றவர். மதுரை பல்கலையில் இவரது முனைவர் பட்ட ஆய்வேடான 'அழகர்கோயில்' ஆய்வுகளுக்கான முன்னோடி நுாலாகும்.

  இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரிகளில் தமிழ்த்துறையில் பணியாற்றியுள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவராக 98 முதல் 2008 வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அறியப்படாத தமிழகம், சமயங்களின் அரசியல் உள்பட 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். தமிழர்களின் பண்பாடுகள், வாழ்வியல் முறைகள் குறித்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்.

  இந்நிலையில் தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(70) உடல்நலக்குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

  இந்நிலையில் தொ.பரமசிவன் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் 'தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது டுவீட்டில் அடங்காத் துயரம்.' என்று பதிவிட்டுள்ளார்.

  தமிழில் இயங்கிவந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராக தொ.பரமசிவன் திகழ்ந்து வந்தார். அத்துடன் தமிழ் பண்பாட்டின் வேர்களை தனது நூல்கள் மூலமும் எடுத்துரைத்தும் வந்தார். அழகர் கோயில், அறியப்படாத தமிழகம் போன்ற நூல்கள் தொ.பரமசிவத்தின் முக்கிய படைப்புகளாகும்.
  Next Story
  ×