search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    திருப்பூர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1400-க்கு விற்பனை

    கடும் பனிப்பொழிவு காரணமாக விலை உயர்வு ஏற்பட்ட மல்லிகைப்பூ திருப்பூர் சந்தையில் கிலோ ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் ரோடு, காட்டன் மார்க்கெட் வளாகத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சேலம்,திண்டுக்கல், தருமபுரி, சத்தி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாகவே பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

    இதேபோல் பூக்களின் விலையும் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மல்லிகைப்பூவின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

    வழக்கமாக திருப்பூர் மார்க்கெட்டிற்கு சுமார் 1 டன் வரை மல்லிகைப்பூ வரும் நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சுமார் 500 கிலோ வரை மல்லிகைப்பூ வந்தது.

    ஆனால் நேற்று மல்லிகைப்பூ வரத்து முற்றிலுமாக குறைந்து சுமார் 150 கிலோ மட்டுமே வந்துள்ளது.

    வரத்து குறைவாக இருந்ததால் மல்லிகைப்பூவின் விலையும் அதிகரித்தது. கடந்த சில தினங்களாக கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையான மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.1400 வரைக்கும் விற்பனையானது. இதேபோல், முல்லைப்பூ ரூ.700-க்கும், செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.200, பிச்சிப்பூ ரூ.700, பட்டுப்பூ ரூ.80 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டது.

    பூ வரத்து குறைவாக இருந்ததால் பூ தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், மல்லிகைப்பூ விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.
    Next Story
    ×