search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூக்கள்
    X
    பூக்கள்

    தோவாளையில் பூக்கள் விலை உயர்வு

    பனிப்பொழிவு, சூறைக்காற்று காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பூ வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். மேலும் வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். தற்போது பூ மார்க்கெட்டுக்கு வரத்து குறைவாக இருந்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில்,

    இந்த மாதத்தில் முகூர்த்த நாள் அதிகமாக உள்ளது. திருமண தேவைக்கு மல்லிகைப்பூவும், பிச்சி பூவும் மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. தோவாளை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை, பிச்சி பூவின் வரத்து மிகவும் குறைவாகவே இருக்கிறது. கடுமையான பனிப்பொழிவு, சூறைக்காற்று காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக மல்லிகை பூ 500 கிலோ வந்து கொண்டு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக 10 கிலோ மல்லிகை பூ வருகிறது. இதனால், மல்லிகைப்பூ விலை உயர்ந்து காணப்பட்டது என்று கூறினார்.

    தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    அரளிப்பூ ரூ.200, பிச்சி ரூ.750, முல்லை ரூ.750, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.60, கேந்தி ரூ.85, சம்பங்கி ரூ.250, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன்ரோஸ் ரூ.200, துளசி ரூ.30, தாமரை (100 எண்ணம்) ரூ.1000, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.70, கொழுந்து ரூ.150, மருக்கொழுந்து (கட்டு) ரூ.150, மஞ்சள்கேந்தி ரூ.80, சிவந்தி ரூ.170, வெள்ளை சிவந்தி ரூ.170, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.300 என விற்பனையானது.
    Next Story
    ×