search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்தம்
    X
    வேலை நிறுத்தம்

    27-ம் தேதி ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம் - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

    வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் முருகன் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காலம் முடிந்து இன்னும் முழுமையாக அனைத்து வாகனங்களும் இயங்கவில்லை. மோட்டார் சமூகத்தினர் பெருத்த கடன் பிரச்சினையில் இருந்து வருவதால் இது வேலைநிறுத்தத்துக்கு ஏற்ற தருணம் இல்லை. மேலும் மோட்டார் துறையில் பல்வேறு முதன்மையான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இவைகள் எல்லாம் இணைத்து போராட வேண்டியது இருக்கிறது.

    எனவே தற்போதுள்ள சூழல் தமிழர்களுடைய முக்கிய பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி வரும் 27-ம் தேதி மாநில சம்மேளனம்-நாமக்கல் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பங்கேற்காது.

    தமிழகத்தில் உள்ள லாரிகள், டிரைலர் லாரிகள், டிப்பர் லாரிகள், மணல் லாரிகள், டேங்கர் லாரிகள், தண்ணீர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் போன்ற அனைத்து லாரிகளும் வழக்கம்போல இயங்கும்.

    இதேபோல தோழமை அமைப்புகளில் இருக்கக்கூடிய ஆட்டோக்கள், கால் டாக்சிகள், சுற்றுலா வாகனங்கள், மினி ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட 13.5 லட்சம் வாகனங்களும் வழக்கம்போல இயங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×