search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டரிடம், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி
    X
    கலெக்டரிடம், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி

    மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - கலெக்டரிடம், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. மனு

    மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
    இட்டமொழி:

    நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, நாங்குநேரி, களக்காடு ஆகிய யூனியன் பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாமல் வறட்சி நிலவுகிறது.

    எனினும் விவசாயிகள் நெல் நாற்றுகளை நடுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். ஆனால் குளங்களில் தண்ணீர் இல்லாததால் நெல் நடவு பணிகள் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. ஆகையால் இப்பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரும் வகையில், மணிமுத்தாறு அணையின் 1, 2-வது ரீச்சுகளில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    அவருடன் நாங்குநேரி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மலையன்குளம் சங்கரலிங்கம், களக்காடு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாபு, நாங்குநேரி ஒன்றிய துணை செயலாளர் சிறுமளஞ்சி சிவா, ரெட்டியார்பட்டி முன்னாள் ஊராட்சி செயலாளர் மணிபிள்ளை, முன்னீர்பள்ளம் முன்னாள் ஊராட்சி செயலாளர் பழனியப்பன் ஆகியோர் இருந்தனர்.
    Next Story
    ×