search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

    கரூரில் 30 அம்மா மினி கிளினிக்குகள்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

    கரூர் மாவட்டத்திற்கு 30 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி, சோமூர், வேடிச்சிபாளையம், மணவாடி மற்றும் பாலவிடுதி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் தமிழக அரசு, தற்போது புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் நலன்கருதி காய்ச்சல் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் செயல்படும் வகையில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனையான திட்டமாகும்.

    கரூர் மாவட்டத்திற்கு 30 அம்மா மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் முதற்கட்டமாக மின்னாம்பள்ளி, நெரூர் வடக்கு, சோமூர், ஆண்டாங்கோவில், பாலவிடுதி, மணவாடி, இரும்பூதிப்பட்டி, உடையாப்பட்டி, நந்தனூர், பெரியவளையப்பட்டி ஆகிய பகுதிகளில் 11 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் சிறப்பு பரிசுடன் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    நமது கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.300 கோடி மதிப்பில் உலக தரம்வாய்ந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை வழங்கி, ஆண்டுதோறும் 150 மாணவர்கள் பயிலும் வகையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வாய்ந்த மருத்துவக்கல்லூரியாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
    Next Story
    ×