search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி.
    X
    ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி.

    கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - கனிமொழி வலியுறுத்தல்

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தூத்துக்குடி:

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

    அ.தி.மு.க.வினர் பதவியை தக்க வைத்துக்கொண்டால் போதும் என்று செயல்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய அரசு இந்தி திணிப்பு, நீட் தேர்வு கொண்டு வந்த போதும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த போதும் அதனை ஏற்று வரவேற்கின்றனர். மத்திய அரசை எதிர்த்து எழக்கூடிய முதல் குரல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குரல்தான்.

    மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறியது. அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறினார்கள். எதையும் செய்யவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசாக மத்திய அரசு உள்ளது. அவர்களுக்கு அடிமைகளாக அ.தி.மு.க அரசு உள்ளது. 2 பேரும் போட்டி போட்டுக்கொண்டு நாட்டை நாசமாக்கி வருகிறார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் சம்பவம் ஆகியவற்றை மூடி மறைக்க துடிக்கும் முதல்-அமைச்சர்தான் தற்போது உள்ள முதல்-அமைச்சர். மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டு இருப்பவர்கள் தான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்று சிந்திக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகும். அந்த ஆட்சி தலையாட்டி பொம்மையாக இருக்காது என தெரிவித்தார்.
    Next Story
    ×