search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் அதிமுக, திமுக கோரிக்கை

    தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தவிர மற்ற அரசியல் கட்சிகள் தமிழகம் வந்துள்ள தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளன.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், முதல் கட்டமாக இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு சென்னை வந்து ஆய்வு மேற்கொள்கிறது.

    அதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில், தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஸ் குந்ரா, பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ரீநிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஞ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.

    கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 3–வது அல்லது 4–வது வாரத்தில் முன்கூட்டியே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

    இதேபோல், தி.மு.க. சார்பில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பது குறித்து அளிக்கப்பட்டு மனு மீது நடவடிக்கை எடுத்து சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அரசியல் கட்சியினருடனான சந்திப்பிற்கு பிறகு உயர்மட்டக்குழுவினர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.
    Next Story
    ×