search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தர்மபுரி அருகே விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தர்மபுரி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விடுதலைவிரும்பி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் பாஸ்கரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த சட்டம்-2020-ஐ திரும்ப பெற வேண்டும். இந்திய விவசாயத்தை கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு விற்க கூடாது என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பங்கேற்றனர். மேலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×