search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர் மக்கள் கட்சியின் கடித நகல்
    X
    எம்ஜிஆர் மக்கள் கட்சியின் கடித நகல்

    டார்ச் லைட் சின்னம் விவகாரத்தில் புதிய திருப்பம்... வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி

    எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.
    சென்னை:

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் தமிழகத்தில் அந்த கட்சிக்கு எந்த சின்னத்தையும் ஒதுக்கவில்லை. அதேசமயம் டார்ச் லைட் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால், தமிழகத்திலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

    கமல் ஹாசனே நேரில் வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை விட்டுத்தர மாட்டேன் என அக்கட்சியின் தலைவர் விஸ்வாதன் கூறியிருந்தார்.

    இந்நிலையில் திடீர் திருப்பமாக விஸ்வநாதன், தனது கட்சிக்கு கொடுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுத்துள்ளார். டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் சின்னங்களை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். 

    ‘எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கியது ஏற்புடையது அல்ல. டார்ச் லைட் சின்னம் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம். எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் கழுத்துப் பட்டை, படகோட்டும் மனிதன், தொப்பி, கை வண்டி ஆகிய சின்னங்களை ஒதுக்க வேண்டும்’ என்று விஸ்வநாதன் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.

    டார்ச் லைட் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி விட்டுக்கொடுத்திருப்பதால், அந்த சின்னம் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×