search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நோய் தாக்குதலுக்கு ஆளான சம்பா நெற்பயிர்கள்.
    X
    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நோய் தாக்குதலுக்கு ஆளான சம்பா நெற்பயிர்கள்.

    சம்பா-தாளடி நெற்பயிர்களை நோய் தாக்கும் அபாயம்: விவசாயிகள் கவலை

    திடீர் வானிலை மாற்றம் காரணமாக சம்பா, தாளடி நெற்பயிர்களை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காணப்படுகிறது.

    இந்த திடீர் வானிலை மாற்றத்தால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை பூச்சி தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போது நிலவும் வானிலை பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யவும், பூச்சிகள் பயிர்களை உணவாக சாப்பிடுவதற்கும் ஏற்றதாக உள்ளது. இதன் காரணமாக மசூல் பாதிக்கப்படும். இலைப்பேன் மற்றும் ஆனைக்கொம்பன் நோய்தாக்குதல் அதிகரிக்கக்கூடும். இதே வானிலை இன்னும் ஓரிரு நாட்கள் தொடரும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நோய் தாக்கம் பரவ வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே தொடர்மழையால் மூழ்கிய பயிர்களுக்கு உரம் தெளிக்க அதிக செலவு செய்துள்ளோம். இந்த நிலையில் நோய் தாக்க வாய்ப்புள்ள பருவ நிலை காணப்படுவது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
    Next Story
    ×