search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமையல் எரிவாயு சிலிண்டர்
    X
    சமையல் எரிவாயு சிலிண்டர்

    கியாஸ் சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 அதிகரிப்பு- இல்லத்தரசிகள் குமுறல்

    கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் தொடங்கி 15 நாட்களில் ரூ.100 உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதத்திலேயே 2-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. அந்தவகையில் இந்த மாதம் தொடங்கி 15 நாட்களில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளை குமுற செய்திருக்கிறது.

    இதுகுறித்து இல்லத்தரசிகள் ஆதங்கத்துடன் கூறியதாவது:-

    கியாஸ் சிலிண்டர் விலை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஒரேடியாக இப்படி அதிகமாக கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் தொடங்கி 15 நாட்களிலேயே மீண்டும் கியாஸ் சிலிண்டர் விலை உயரும் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரை வெகுவாகவே பாதிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே பழைய விலையிலேயே அதாவது ரூ.660-க்கே கியாஸ் சிலிண்டரை புக் செய்திருந்தாலும், தற்போது புதிய விலையிலேயே அதாவது ரூ.710-க்கே கியாஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×