search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    ரூ.100¼ கோடியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

    சேலத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.100¼ கோடியில் நடைபெற்று வரும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மாநகர பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சேலம்:

    சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.85.39 கோடி மதிப்பீட்டில் 77.07 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ரூ.14.86 கோடி மதிப்பீட்டில் 10.84 கிலோ மீட்டர் நீளத்திற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கழிவுநீரை வண்டிபேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மான்குட்டை கழிவுநீர் நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பு மேற்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அம்மாபேட்டை மண்டலம் திருமணிமுத்தாறு ஆற்றோரம் காய்கறி சந்தை பகுதி, சங்கீத் தியேட்டர் அருகில் தாதுபாய் குட்டை, ஏ.ஏ. ரோடு, கொண்டலாம்பட்டி மண்டலம் நெத்திமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் 28-வது வார்டு முதல் 32-வது வார்டு வரையில் உள்ள பகுதிகளான அப்புசெட்டி தெரு, செவ்வாய்பேட்டை, பென்சன் தெரு, அங்காளம்மன் தெரு, மாதவராயன் தெரு, சுப்பிரமணியன் தெரு, மதுரை சேர்மன் தெரு, தாண்டன் தெரு, பழைய மார்க்கெட் தெரு, சந்தை பேட்டை மெயின் ரோடு, வண்டிபேட்டை மெயின் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, செவ்வாய்பேட்டை அக்ரஹாரம் தெரு ஆகிய பகுதிகளில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த இரு பணிகளிலும் இதுவரை 6.1 கி.மீ நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ரூ.27.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வண்டிபேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் சீனிவாச மூர்த்தி உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×