search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் ஹாசன்
    X
    கமல் ஹாசன்

    சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் -கமல் ஹாசன் பேட்டி

    வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் என்றும் கமல் ஹாசன் கூறினார்.
    மதுரை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று இரண்டாவது நாளாக மதுரையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பிரசாரத்தின் மத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து கமல் பேசியதாவது:-

    வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டி என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 

    ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். வரும் 31-ம் தேதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள். 

    கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×