search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் ஹாசன்
    X
    கமல் ஹாசன்

    பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? -பிரதமருக்கு கமல் கேள்வி

    டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் இருந்து தொடங்க உள்ளார். தனது பிரச்சாரத்தில் தமிழகம் மற்றும் தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து ஆதரவு திரட்ட உள்ளார். 

    பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் கமல் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வருமாறு:-

    சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  

    பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.... 

    இவ்வாறு கமல் கூறி உள்ளார்.
    Next Story
    ×