search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்
    X
    மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்

    மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றுவது எப்படி?-அதிகாரி விளக்கம்

    பூதலூர் பகுதியில் மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றுவது எப்படி? என அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தன. தற்போது நீரில் மூழ்கிய வயல்களில் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. முழுமையாக நீரில் மூழ்கிய சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு தழைச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் பயிர்களில் உள்ள இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.

    இதுபோன்று அறிகுறிகள் காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் இரண்டு கிலோ யூரியாவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

    மூழ்கிய நெல் பயிர்களில் பயிர் வளர்ச்சி குன்றி இருந்தால் ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4கிலோ வேப்பம் புண்ணாக்கை முதல் நாள் இரவே கலந்து வைத்து காலையில் இதனுடன் 17 கிலோ பொட்டாஷ் சேர்த்து வயலில் தெளிக்கவேண்டும். மேலும் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் தொடர்பு கொண்டு அவர்கள் சொல்லும் பரிந்துரைகளின் படி செயல்படுத்த வேண்டும். இவ்வறு அந்த செய்திக்குறிப்பில் பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×