search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரையில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்தம்

    ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக மதுரை மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை சார்பில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டாக்டர்கள் இன்று அடுத்த கட்டமாக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் 400 தனியார் மற்றும் நடுத்தர ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் டாக்டர்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்களில் சிலரே இன்று பணிக்கு வரவில்லை. டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்கனவே பயிற்சி டாக்டர்கள் பலரை பணிகளுக்கு நியமித்து இருந்தது. இதனால் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதிப்பு இல்லை.

    இந்திய மருத்துவ கழக நிர்வாகிகளிடம் வேலை நிறுத்தம் தொடர்பாக பேசிய போது அவர்கள் கூறியதாவது:-

    ஆயுர்வேதம் படித்தவர்களையும் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தவிர பொதுமக்களுக்கான அனைத்து மருத்துவங்களையும் நிதி ஆயோக் மூலம் ஒரே கலவை முறையாக கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

    இன்னொருபுறம் தேசிய கல்விகொள்கை மூலமாக பள்ளிகல்வி, மருத்துவ கல்வியில் ஆயஷ் பயின்ற மாணவர்கள் அலோபதி மருத்துவமுறையை படிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது மனித உயிர்களுடன் விளையாடுவதற்கு சமம். இதனால் நோயாளிகளுக்கு பல்வேறு பின்விளைவுகள் ஏற்படலாம். இதனை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
    Next Story
    ×