search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    புதிய பாராளுமன்றம் இந்தியாவின் தனித்துவ அடையாளம்- முதல்வர் பழனிசாமி புகழாரம்

    புதிய பாராளுமன்றம் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற  கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் போதிய இடவசதி இல்லாத சூழலை முன்னிட்டு, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது.

    டெல்லியில் புதிதாக அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர்.

    ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் வருகிற 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார். புதிய பாராளுமன்றம் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என்று அவர் புகழ்ந்து கூறியுள்ளார்.
    Next Story
    ×