search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை படத்தில் காணலாம்.
    X
    திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை படத்தில் காணலாம்.

    தென்கால்-நிலையூர் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் வருமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

    வைகை அணையில் இருந்து நிலையூர் கால்வாய் வழியாக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வருவது எப்போது என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் பரப்பளவு மற்றும் நீரின் கொள்ளளவில் 2-வது பெரிய கண்மாய்களாக இருப்பது திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் மற்றும் நிலையூர் (கூத்தியார்) கண்மாய்கள் ஆகும். இந்த 2 கண்மாய்களிலும் குடி மராமத்து திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் கரைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் கண்மாயின் உள் பகுதியை தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக தூர்வாரி ஆழப்படுத்தவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நிலையூர் கால்வாய் வழியாக தென்கால் கண்மாய் மற்றும் நிலையூர் கண்மாய்க்கு மழைநீர் வரத்து இருந்தது. கண்மாய்களுக்குள் 40 சதவீதம் தண்ணீர் வந்ததை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாயிகள் தங்களது வயல்களில் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலையூர் கால்வாயில் மழை உபரி தண்ணீர் வரத்து திடீரென்று நின்றுவிட்டது.

    ஷட்டரை அடைத்து மழைநீரை வேறு வழியாக மாற்று கண்மாய்களுக்கு கொண்டு செல்வதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் கண்மாய் முழுமையாக நிரம்ப வாய்ப்பு இருக்காது என்றும், விவசாயமும் எதிர்பார்த்தபடி நடக்காத நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிலையூர் கால்வாயில் தங்கு தடையின்றி மழை நீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து நிலையூர் கால்வாய் வழியாக கொண்டுவந்து கண்மாய்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×