search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    மதிமுக தேர்தல் அறிக்கைகுழு வாக்குச்சாவடி பார்வையாளர்கள் நியமனம்- வைகோ அறிவிப்பு

    தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு ம.தி.மு.க. தயாராகி வருகிறது. இதற்கான பொறுப்பாளர்களை ம.தி.மு.க. செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வரைவு குழுவில் ம.தி.மு.க. ஆட்சிமன்ற குழு செயலாளர் செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் வந்தியதேவன், கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம், கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர் மாரியப்பன், தேர்தல் பணி செயலாளர் அந்திரிதாஸ், இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடி முகவர் பணிக்குழு பார்வையாளர்கள் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வடசென்னை, சென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை கிழக்கு, மேற்கு, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு கிழக்கு, வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வாக்குச்சாவடி மேற்பார் வையாளர்களாக ம.தி.மு.க. தேர்தல் பணி செயலாளர் அந்தரிதாஸ், தேர்தல் பணி துணை செயலாளர் பூங்காநகர் ராமதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டங்களுக்கு தேர்தல் பணி துணை செயலாளர்கள் செந்தில் செல்வன், ஜானகி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, மேற்கு தெற்கு மாவட்டங்கள் மாணவர் அணி துணை செயலாளர் பாசறை பாபு, கொள்கை விளக்க அணி துணை செயலாளர் அழகிரி.

    திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், மாணவர் அணி செயலாளர் சசிகுமார், மாணவர் அணி துணை செயலாளர் ஆசைதம்பி.

    தஞ்சை தெற்கு, வடக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள், விவசாய அணி துணை செயலாளர் ராசேந்திரன், தேர்தல் பணி துணை செயலாளர் செந்தில்குமார்.

    சேலம் மத்திய மாவட்டம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ம.தி.மு.க. தீர்மானக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாணவர் அணி துணை செயலாளர் கோபால கிருஷ்ணன்.

    ஈரோடு மாநகர், கிழக்கு, மேற்கு, திருப்பூர் புறநகர், மாநகர் நாமக்கல் மாவட்டங்கள், இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், தேர்தல் பணி துணை செயலாளர் சேதுபதி.

    கோவை மாநகர், தெற்கு, வடக்கு நீலகிரி மாவட்டங்கள்- தேர்தல் பணி துணை செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி.

    மதுரை மாநகர், வடக்கு, தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள்- மீனவர் அணி செயலாளர் நக்கீரன், தேர்தல் பணி துணை செயலாளர் கேசவ நாராயணன்.

    நெல்லை மத்திய மாவட்டம், நெல்லை புறநகர், தென்காசி, விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்டங்கள்- தொண்டர் அணி செயலாளர் பாஸ்கர சேதுபதி, தேர்தல் பணி துணை செயலாளர் விஜய குமார் பாக்கியம்.

    தூத்துக்குடி வடக்கு, தெற்கு, குமரி மாவட்டம்- அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கல்லத்தியான், தேர்தல் பணி துணை செயலாளர் சுதாபால சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மேற்பார்வையாளர்களை மாவட்ட கழக செயலாளர் மூலம் தொடர்பு கொண்டு வருகிற 31-ந் தேதிக்குள் வாக்குச்சாவடி முகவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×