search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் முருகன்
    X
    எல் முருகன்

    வேளாண் சட்டங்கள் குறித்து 8-ந்தேதி முதல் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கம்: எல்.முருகன்

    வேளாண் சட்டங்கள் குறித்து வருகிற 8-ந் தேதி முதல் கிராமங்கள்தோறும் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கி கூற உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
    தஞ்சாவூர்:

    தமிழக பா.ஜ.க. சார்பில் வெற்றிவேல் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களின் வழியாக செல்லும் இந்த யாத்திரை நாளை (திங்கட்கிழமை) திருச்செந்தூரில் நிறைவடைகிறது.

    வேல் யாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலுக்கு வேலுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரை கல்லணை வழியாக நடந்தது. கல்லணையில் உள்ள காவிரி அம்மன் சிலைக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டுவர உள்ள வேளாண் சட்டங்களின் தன்மை குறித்து கருத்தரங்குகளை பா.ஜனதா நடத்தி வருகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன், சென்னையில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    அப்போது இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். வருகிற 8-ந் தேதி முதல் பா.ஜனதா கட்சியினர், கிராமங்கள் தோறும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, நாளை திருச்செந்தூரில் நடைபெறும் வேல்யாத்திரை நிறைவு விழாவை மாநாடு போல் பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். வெற்றிவேல் நிறைவு யாத்திரையில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்று பேசுகிறார்.
    Next Story
    ×