search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழை காரணமாக கடல் போல காட்சி அளிக்கும் கடயக்குடி அய்யனார் குருக்கள் ஏரி
    X
    தொடர் மழை காரணமாக கடல் போல காட்சி அளிக்கும் கடயக்குடி அய்யனார் குருக்கள் ஏரி

    தொடர் மழையால் கடலாக மாறிய அய்யனார் குருக்கள் ஏரி

    தொடர் மழை காரணமாக கடயக்குடி அய்யனார் குருக்கள் ஏரி கடல் போல காட்சி அளிக்கிறது. ஏரி அருகே உள்ள வயல்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் பாசனம் பெற்று ஒரு போக நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அமோக விளைச்சல் நடைபெற்றது. பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதியில் ஏரிப்பாசனம் விவசாயத்துக்கு உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய் ஆகஸ்ட் மாதம் 24 -ந் தேதி திறக்கப்பட்டது. உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் ஆகஸ்ட் 24-ந் தேதி திறக்கப்பட்டும் கால்வாயின் கடைமடை பகுதியாக உள்ள கடையக்குடி அய்யனார் குருக்கள் ஏரிக்கு தண்ணீர் சென்று சேராத நிலையை இருந்து வந்தது. இது குறித்து விவசாயிகள் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். இதனால் கடயக்குடி அய்யனார் குருக்கள் ஏரிக்கு உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயிலிருந்து தண்ணீர் தரப்பட்டது.

    தற்போது நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடயக்குடி அய்யனார் குருக்கள் ஏரி நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து அய்யனார் குருக்கள் ஏரி பாசன பகுதியில் உள்ள வயல்களை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. இந்த பாசன பகுதியில் ஒரு போக சாகுபடி செய்வதற்காக நாற்றங்கால் அமைத்து இருந்த நாற்றங்கால்களையும் மழைநீர் மூழ்கடித்து விட்டது. தண்ணீர் வருமா? என்று ஏங்கித் தவித்த கடயக்குடி கிராம விவசாயிகள் தற்போது ஏரி நிரம்பி வயல் களை தண்ணீர் மூழ்கடித்து உள்ளதால் மிகுந்த சோகத்தில் உள்ளனர். எனவே மீண்டும் ஒரு முறை நாற்றங்கால் அமைத்து பின்னர் நடவு செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
    Next Story
    ×