search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்.அறிவுச்செல்வம் பா.ஜ.க.வில் இணைந்தார்.
    X
    ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்.அறிவுச்செல்வம் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணியா?- எல்.முருகன் பதில்

    ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணியா? என்பது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வேல் யாத்திரைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. 5-ந் தேதி (இன்று) திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய பகுதிகளுக்கு வேல் யாத்திரை செல்கிறது. 6-ந் தேதி (நாளை) திருச்செந்தூரில் காலை வழிபாடு நடைபெறுகிறது. 7-ந் தேதி யாத்திரை நிறைவு பெறுகிறது. இதில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் பங்கேற்கிறார்.

    புதிய வேளாண்மை சட்டம், விவசாயிகளை பாதுகாக்கும் சட்டம் என்றும், இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கும் விதமாக 8-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் விவசாயிகள் தொடர்பு இயக்கத்தை நடத்த உள்ளோம்.

    ரஜினிகாந்த் தேச பற்றாளர். புதிதாக கட்சி தொடங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் கட்சி தொடங்குவது அவரது உரிமை. அவர் கட்சி தொடங்கும்போது, அகில இந்திய தலைமை எப்படி வழிகாட்டுகிறதோ அதன்படி தமிழக பா.ஜ.க. செயல்படும்.

    ரஜினியுடன், பா.ஜ.க. கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும்.

    வருகிற தேர்தலில் தி.மு.க. வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தி.மு.க.வை வீழ்த்தி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பா.ஜ.க.வுக்கு இன்னும் அதிகம் பேர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்.அறிவுச்செல்வம் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து அக்கட்சியில் அவர் இணைந்தார்.
    Next Story
    ×