search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா
    X
    பா.ஜனதா

    பா.ஜனதா அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்

    அர்ஜுனமூர்த்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், பா.ஜனதா அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார்.
    பா.ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி. நேற்று ரஜினி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி நின்றிருந்தார். இவர்தான் தொடங்கப்போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ரஜினி அறிவித்தார்.

    அதன்பின் பா.ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பா.ஜனதா கட்சி தெரிவித்தது. இந்த நிலையில் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
    Next Story
    ×