search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    ரஜினி கட்சி தொடங்குவதற்கு ஜனவரியில் 3 நாட்கள் சிறப்பானது- ஜோதிடர் ஆதித்யகுருஜி கணிப்பு

    ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு மற்றும் அந்த கட்சியின் தலைவர் மிகப்பெரிய அதிகார அமைப்பில் அமர்வதற்கானது. இதற்கு ஜோதிடப்படி பதவியை குறிக்கக்கூடிய பத்தாம் இடமும், சூரிய சந்திரர்களும் வலுவாக இருக்க வேண்டும்.
    சென்னை:

    உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்திருக்கிறார்.

    அரசியல் கட்சியைப் போன்று ஒரு மாபெரும் தொண்டர்கள் படையைக் கொண்ட ஒரு அமைப்பு, ரசிகர் மன்றம் எனும் பெயரில் அவருக்கு ஏற்கனவே இருக்கிறது.

    ஜோதிடரீதியாக ஏற்கனவே உள்ள ஒன்றை புதிய அமைப்பாக மாற்றுவதற்கான சில நிலைகளை ரஜினிகாந்த் ஜாதகத்துடன் பொருத்திப் பார்த்து, அவருக்கு ஏற்ற கட்சி துவக்க தேதியினை அறிவிப்பதற்கு அல்லது அது சம்பந்தப்பட்ட கையெழுத்துகள் இடுவதற்கு ஏற்ற ஒரு மிகவும் நல்ல ஜோதிட நேரங்களைக் கீழே கொடுத்திருக்கிறார் ஜோதிடர் ஆதித்யகுருஜி.

    இவை ரஜினிகாந்தின் ஜாதகத்திற்கு மட்டுமேயான ஒரு தனிப்பட்ட நேரங்கள்.

    பொதுவான முகூர்த்த நாட்களுக்கும் ரஜினிகாந்துக்கு மட்டுமான நல்ல நாட்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதைப் போலவே ஒரு திருமணத்திற்கு நாள், நேரம் குறிப்பதற்கும், இதுபோன்ற அரசியல் கட்சி அமைப்பிற்கு நாள், நேரம் குறிப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

    திருமணம் என்பது இருவர் மட்டும் வாழ்வில் இணைந்து இன்ப துன்பங்களை அனுபவிக்க இருப்பது. அதற்கு கணவன் மனைவியை குறிக்கக்கூடிய ஏழாமிடம் சுபகிரகங்களால் பார்க்கப்படுகின்ற, ஒரு லக்ன நேரத்தில் தாலி கட்டுவதற்கான நேரத்தைக் குறித்துக் கொடுப்போம். இந்த கல்யாண நாளில் காமத்தை குறிக்கக்கூடிய சுக்கிரனும், குழந்தையை தரும் குருவும் வலுவாக இருக்க வேண்டும்.

    ஆனால் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது அதுபோன்ற நோக்கத்திற்காக அல்ல. அது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு மற்றும் அந்த கட்சியின் தலைவர் மிகப்பெரிய அதிகார அமைப்பில் அமர்வதற்கானது. இதற்கு ஜோதிடப்படி பதவியை குறிக்கக்கூடிய பத்தாம் இடமும், சூரிய சந்திரர்களும் வலுவாக இருக்க வேண்டும்.

    1) தை 5, ஜனவரி மாதம் 18-ந் தேதி ,வளர்பிறை, திங்கட்கிழமை,சஷ்டி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், மதியம் 12.50முதல் 1. 15 வரை கட்சி தொடங்குவதற்கு ஏற்ற நாளாக அமைகிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சம் என்னவெனில் அன்று தாராபலம் ரஜினிக்கு குறைவாக உள்ள சனியின் நட்சத்திரமாக உள்ளது. ஆயினும் பிறந்த ஜாதகத்தில் சனிபகவான் அவருக்கு கேதுவுடன் இணைந்து சூட்சுமவலுவாக எதையும் நன்கு தரவல்ல அமைப்பில் இருப்பதால் இது விதிவிலக்குதான்.

    குறிப்பிட்டுள்ள இந்த அரை மணி நேரம் மே‌ஷலக்னமாக அமைந்து, லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சனி, குரு ஆகிய நான்கு கிரகங்கள் அமர்ந்து, அதில் சூரியன் திக்பலமாக நல்ல வலுவுடன் அமர்ந்திருக்கிறார். ஒரு தொழிலில் ஜெயிக்க கூடிய மற்றும் அதிகார பதவியை தரக்கூடிய ஒன்பது, பத்துக்குடையவர்கள் இருவரும் பத்தாமிடத்தில் தர்மகர்மாதிபதி யோகத்தில் இணைய லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து இருப்பதால் இது சிறப்பான ஒன்று தான். சூரியனும் குருவை அஸ்தங்கப்படுத்தி அதிக சுபத்துவமாக இருக்கிறார்.

    2) தை 14, ஜனவரி 27-ந் தேதி, புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய, மே‌ஷ லக்னம், காலை 11.10 முதல் 11.35 வரை அவருக்கு மிகவும் சிறப்பான தாரா பலம் உள்ள நாளாக இருக்கிறது. இன்றைய புனர்பூசம் குருவின் நட்சத்திரமாக வருவது ரஜினிக்கு மிகவும் சிறப்பான ஒன்று.

    இந்த நாளில் கட்சி ஆரம்பிக்கும் பொழுது நான் மேலே சொன்ன பத்தாமிட தொடர்பும் நன்றாக அமைந்து, லக்னாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணம் சிறப்பாக நிறைவேறும். சந்திரனும் இன்று பூரணத்தை நெருங்கும் நல்ல நிலையில் இருக்கிறார்.

    3) ஜனவரி 28, வியாழக்கிழமை, பூரண பவுர்ணமி நாளான அன்று தைப்பூச நன்னாளாகவும் அமைகிறது. இன்று சந்திரனும், சூரியனும் கேந்திரங்களில் அமர்வார்கள். இந்த நாளும் ரஜினிக்கு தாராபலம் அமையாமல் சனியின் நட்சத்திரமான பூசமாக இருந்தாலும் பவுர்ணமி தினம் எதிலும் ஒரு விதிவிலக்கான நிறைவான நாள் என்பதால் வரும் ஜனவரி மாதம் 28-ந் தேதி மே‌ஷலக்னத்தில் கட்சி ஆரம்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×