search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர், பல்லடத்தில் தி.மு.க. சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    திருப்பூர், பல்லடத்தில் தி.மு.க. சார்பில் நாளை கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு எனது தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் மக்கள் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறும் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    இதுபோல் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு எனது தலைமையில் பல்லடம் பஸ் நிலையம் கொசவம்பாளையம் பிரிவில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் மக்கள் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×