search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினா கடற்கரையில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கிய காட்சி
    X
    மெரினா கடற்கரையில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கிய காட்சி

    எச்சரிக்கை விடுக்காத போதிலும் சென்னையில் பலத்த மழை ஏன்?

    தென் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும் என்ற கணிப்பை மாற்றும் அளவுக்கு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது வானிலை மைய அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    சென்னை:

    புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. கன மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் கணிக்கவில்லை.

    ஆனால் அவர்களது கணிப்பை மாற்றும் அளவுக்கு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இது வானிலை மைய அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்த காட்சி

    இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசனிடம் கேட்டபோது, “வட மாவட்டங்களில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்து இருந்தோம். ஆனால் சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. இதற்கும் புரெவி புயலின் தாக்கமே காரணமாகும். இன்று முழுவதும் மழை நீடிக்கும்” என்று தெரிவித்தார்.

    Next Story
    ×