search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், அகில இந்திய கிசான் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி முத்துக்குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு நிர்வாகி ரங்கநாயகி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பபெற வேண்டும். விவசாயிகளுக்கான இலவச மின்சார திருத்த சட்ட மசோதா 2020- ஐ திரும்பப்பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    Next Story
    ×