search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன்- ஓ பன்னீர்செல்வம் பேட்டி

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன், அவரது வரவு நல்வரவாகட்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன், அவரது வரவு நல்வரவாகட்டும். ரஜினியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு வாய்ப்பிருந்தால்  கூட்டணி. அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என பதில் அளித்துள்ளார். 
    Next Story
    ×