search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள்
    X
    பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள்

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு 90 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்

    தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு 90 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால், இந்த பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் ஆண்டுதோறும் ஒட்டுமொத்தமாக சொந்த ஊர்களுக்கு பண்டிகையை கொண்டாட சென்றுவிடுவார்கள். குறைந்தபட்சம் 15 முதல் 20 நாட்கள் வரை விடுமுறை எடுப்பார்கள்.

    இதன் பின்னரே திருப்பூருக்கு தொழிலாளர்கள் திரும்புவார்கள். இதற்கிடையே இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் கடந்த 18-ந்தேதியில் இருந்தே திருப்பூருக்கு திரும்ப தொடங்கினார்கள். இதன் காரணமாக பின்னலாடை நிறுவனங்களில் ஆடை தயாரிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது திருப்பூருக்கு 90 சதவீதம் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர்.

    தற்போது குளிர்கால சீசன் ஆடை தயாரிப்பும் பெரும்பாலான நிறுவனங்களில் முடிவடைந்து விட்டது. ஆர்டர்களின்படி பல்வேறு பகுதிகளுக்கு குளிர்கால ஆடைகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த கட்டமாக கோடை கால ஆடை தயாரிப்பில் தொழில்துறையினர் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

    தொழிலாளர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், கூடுதலாக ஆர்டர்கள் எடுத்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், வியாபாரிகளிடம் இருந்து அதிகமாக ஆர்டர்களும் வரத்தொடங்கிவிட்டன.
    Next Story
    ×